• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார்.. கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார்.. கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை மாறாக சசிகலா தான் தொண்டர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல அமமுகவை சேர்ந்தவர்.

  • Share this:
    அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார் அவரது எண்ணம் நிறைவேறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி இன்று வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரோனா பேரிடர் சமயத்தில் தமிழகத்தில் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. திமுக அரசு பதவியேற்று 24 நாட்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் துறை ரீதியான பணிகள் குறித்து ஆய்வு செய்யவே காலம் போதுமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து தொண்டர்களிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. சசிகலா அதிமுகவில் இல்லை. சிறப்பாக எதிர்க்கட்சியாக செயல்படும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலாவை முன்னிறுத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

    இந்த குழப்பத்திற்கு ஒரு அதிமுக தொண்டரும் செவி சாய்க்க மாட்டார்கள், ஒன்னரை கோடி அதிமுக தொண்டரும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசைதிருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் அவர்களுடைய எண்ணம் ஈடு ஏராது.

    சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை மாறாக சசிகலா தான் தொண்டர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல அமமுகவை சேர்ந்தவர். சசிகலா தன்னோடு இருக்கும் ஒரு சில நபர்களை தேர்வு செய்து இது போன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த குழப்பம் நிச்சயமாக வெற்றி அடையாது இதன் மூலம் சசிகலா தான் ஏமாறுவார்.

    அதிமுகவாலும், ஜெயலலிதாவாலும் சாதாரண நிலையில் இருந்த சசிகலா தற்போது தமிழகத்தில் விரல் விட்டு என்னும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். இந்த இயக்கத்தைத் உயர்த்த காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைவதர்காகவாவது சசிகலா ஒதுங்கிக் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் ஜெயலலிதாவின் பழி பாவம் சசிகலாவையே சாறும்.

    சசிகலா எந்த சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கின்றனர் என தெரிவித்தார்.

    தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது கொரோனா பேரிடர் சமயத்தில் அவரவர் தங்கள் தொகுதியில் இருந்து அந்த தொகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தனித்தனியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் இந்த சூழலை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என சசிகலாவை முன்னிறுத்தி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள் இதற்கு சசிகலா இறையாகி விடக்கூடாது என கே.பி.முனுசாமி பதில் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவை வரும்போது ஒரு சிலர் அவரை எதிர்த்து கோ-பேக் மோடி என்று டிரெண்ட் செய்தார்கள். அதே போல் தான் நேற்று ஸ்டாலின் கோவை செல்லும் போது கோ-பேக் ஸ்டாலின் என்று டிரெண்ட் செய்தார்கள். இது பின் விளைவு என்றாலும் ஒரு நாட்டின் முதல்வரை இது போன்று டிரண்ட் செய்வது அநாகரிமான செயல் என்று கூறினார்.

    செய்தியாளர் - ஆ.குமரேசன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: