சேவல் சரியா சண்டை செய்யல.. வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளைஞர் - தந்தை மகன் வெறிச்செயல்

சேவல் சண்டை

சேவல் விற்பனை விவகாரத்தில் இளைஞரை கொலை செய்து தலைமறைவாக உள்ள தந்தை - மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரியில் ஆடுகளம் படத்தைப் போல சம்பவம்..சேவல் சண்டைக்காக வாங்கிய சேவல் சண்டை போடாததால் ஆத்திரம் அடைந்து  சேவல் சண்டை போடவில்லை என்று கேட்ட வாலிபர்   கத்தியால் சரமாரியாக குத்தி கொலை.சேவல் விற்பனை செய்த தந்தை மகன் வெறிச்செயல் .. தப்பி ஓடிய தந்தை மகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

  கிருஷ்ணகிரி அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அகமத். இவரதுமகன் இம்ரான் (வயது 22). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். மேலும் சண்டக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். சண்டக்கோழிபந்தய போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த மார்கோ (56)என்பவரிடம் சண்டக்கோழியை வாங்கியுள்ளார்.

  அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில்நடந்த பந்தய போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் கோழி சரியாக பங்கேற்கவிலலை என கூறப்படுகிறது. இதனால் இம்ரான் மார்கோ மீது ஆத்திரம் அடைந்துள்ளார். இதனையடுத்து நீங்கள் தந்த கோழி சரியாக பங்கேற்கவில்லை என மார்கோவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும்இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் தியேட்டர் அருகில் இம்ரான் மற்றும் மார்கோ ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரம் அடைந்தமார்கோ மற்றும் அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (30) ஆகிய 2 பேரும் இம்ரானை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதை தடுக்க சென்ற இம்ரானின் அண்ணன் சலாவுதீன் (36) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் மார்கோவும்,அவரது மகன் குல்பியும் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

  ரத்தகாயங்களுடன் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காககிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இம்ரான் இறந்து விட்டார். சலாவுதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

  இந்த நிலையில் தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி நகர போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மார்கோ மற்றும் குல்பி (எ) மணிமாறம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜாஸ்வி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டத்தில்கொலையாளிகள் மார்கோ மற்றும் அவரது மகன் மணிமாறன் ஆகியோர் இருவரும் பழைய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளது. இந்த நிலையில் தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலிசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த இம்ரான் உறவினர்கள் சுமார் 100-க்கும்  மேற்பட்டோர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை குவிந்ததால் அங்கு  பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

  செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: