• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒசூரில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

ஒசூரில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

சுவர் இடிந்து விழுந்து  முதியவர் உயிரிழப்பு

சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

ஒசூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Share this:
    ஒசூர் மாநகரில் தொடர்மழையால் வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் தொடர்ந்து மூன்று தினங்களாக சாரல் மற்றும் கனமழை பெய்து வந்தது. இன்று விடியற்காலை வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது. ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 70) . கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மூன்று மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.

    கிருஷ்ணப்பா பழைய பேப்பர், பாட்டில்களை பொறுக்கி தனது செலவுகளை கவனித்து வந்துள்ளார்.  மண் சுவரில் கட்டப்பட்ட வீட்டில் தான் இவர் குடியிருந்து வந்தார். தொடர் மழையின் காரணமாக இவர் குடியிருந்த வீட்டின் சுவர் ஈரத்தால் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணப்பா மீது சுவர் விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

    Also Read:  வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த பக்கத்துவீட்டினர் கிருஷ்ணப்பாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே கிருஷ்ணப்பா உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: செல்வா (ஓசூர் )

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: