Home /News /tamil-nadu /

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் அதிர்ச்சி..

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் அதிர்ச்சி..

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முனிராஜ்

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் முனிராஜ்

Krishnagiri District | கடந்த 15 நாட்களாக மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த கல்லக்குறி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். (வயது 49). இவர் கே.ஆர்.பி அணை காவல் நிலையத்தில்  சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையிலுள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் கடந்த 7 மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கடந்த 15 நாட்களாக மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் அளித்த தகவல் படி விரைந்து சென்ற போலீசார் முனிராஜ் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர்.

    ALSO READ  |  டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    பின்னர் தகவலறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    செய்தியாளர் : ஆ.குமரேசன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Krishnagiri

    அடுத்த செய்தி