கிருஷ்ணகிரி பகுதியில் இன்று அதிகாலை வானில் தென்பட்ட வெளிச்சத்தை அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போன் கேமராவில் படம்படித்துள்ளார். வேற்று கிரக வாசிகளின் விண்கலமா அல்லது ராக்கெட் ஏதேனும் செலுத்தப்பட்டதா என்ற சந்தேகம் இருந்துள்ளது. இத நான் யார் கிட்டயாவது சொல்லியாகனுமேன்னு நம்ம நாட்டாமை படத்துல வர்ற கவுண்டமணி மாதிரி டென்ஷன் ஆகியிருக்கார்.
வானில் தோன்றிய மர்ம வெளிச்சம் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும் தான் எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை அனுப்பிய நபர் தன்னுடைய சந்தேகத்தை போக்க வேண்டும் என நேராக இஸ்ரோவின் வாயிலை தட்டத்தொடங்கினார். வானில் தென்பட்ட வெளிச்சம் பற்றி தெரிந்துக்கொள்ள இஸ்ரோவுக்கு மெயில் தட்டியுள்ளார்.
அதில் ,” இன்று காலை வானில் இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒன்று விண்கலம் அல்லது விமானம் லேசர் ஒளிக்கற்றையுடன் சென்றது. மற்றொருன்று கிழக்கு பகுதியில் வானில் ஒளிரும் காட்சி. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை. இது என்ன என்ற கேள்வியுடன் தன்னுடைய லோகேஷ்னையும் அனுப்பியுள்ளார்.
கடுமையான வேலைகளுக்கு மத்தியிலும் ரொம்ப கூலாக இஸ்ரோவிடம் இருந்து அந்த நபருக்கு பதில் வந்தது. ” உங்க கேமரா நல்லா படம் பிடிச்சிருக்கு. அது வேறு ஒன்றும் இல்லை. இன்று காலை PSLV-C52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. உங்களுக்கு மேற்கொண்டு தகவல் வேண்டும் என்றால் இஸ்ரோ இணையதளத்தை அனுகலாம்” என பதில் வந்துள்ளது. இந்த பதிலை கேட்டதுக்கு அப்புறம் தான் அவர் கூலாகியிருக்கார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.