ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தருமபுரியில் காவலர்களை தள்ளிவிட்டு கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் - தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்

தருமபுரியில் காவலர்களை தள்ளிவிட்டு கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் - தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்

தப்பி ஓடிய கைது விஜி

தப்பி ஓடிய கைது விஜி

சிறைச்சாலையின் முன்பு  இரவு 7 மணி அளவில் காரில் வந்து இறங்கும்போது, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு  கைவிலங்குடன் விஜி தப்பி ஓடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

 தருமபுரி மாவட்ட சிறைச்சாலைக்கு அழைத்து வந்த போது, காவலர்களை தள்ளிவிட்டு, கைவிலங்குடன் கைதி தப்பி ஓடிய நிலையில் தப்பிய கைதியை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உளி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத் மகன் கார்த்திக் என்கின்ற விஜி வயது 38. கூலித்தொழிலாளி.தனது மனைவியை கொலை செய்த வழக்கில் .இன்று அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி தலைமை காவலர்கள் அசோகன், ராஜசேகர் ஆகியோர்  அழைத்து சென்றனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு காரில் தருமபுரி  சிறையில் அடைக்க வந்தனர்.அப்போது  தருமபுரி மாவட்ட  சிறைச்சாலையின் முன்பு  இரவு 7 மணி அளவில் காரில் வந்து இறங்கும்போது, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு  கைவிலங்குடன் விஜி தப்பி ஓடினார்.இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி அதியமான் கோட்டை  போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார்  சிறைச்சாலை வளாகம்,சிறை சாலை முன்பு,உள்ள பதிகால்பள்ளம் வனப்பகுதியில்  இரவு நேரம் என்பதால்  டார்ச் லைட் உதவியுடன்  தேடும்பணியில் ஈடுபட்டனர்.   கிருஷ்ணகிரி-சேலம் பைபாஸ், ராயக்கோட்டை பைபாஸ், தடங்கம் பிரிட்ஜ்,சோகத்தூர் நான்கு ரோடு, தருமபுரி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஆர்.சுகுமார்  (தருமபுரி)

First published:

Tags: Arrest, Crime News, Murder, Police