ஒசூரில் தங்கை உடனான காதலை கைவிட மறுத்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்த தண்டாயுதம் என்பவரின் இரண்டாவது மகன் வினோத்குமார்( வயது 19) கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஒசூர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் அண்ணான சந்தோஷ்குமார் (வயது 18) என்ற வாலிபருக்கு தெரியவந்ததால் பலமுறை, வினோத்தை அழைத்து எச்சரித்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பனான சுல்தான் இருவரும் கட்டிட ஒப்பந்ததாரரான முருகேஷ் என்பவரது வீட்டில் இரவு தங்க ஓசூர் அருகே வாசவி நகருக்கு சென்றுள்ளனர்.
வினோத்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலியின் அண்ணன் சந்தோஷ் குமாருக்கு மதுபோதையில் போன் செய்துள்ளார். உன் பகுதியிலேயே இருக்கிறேன் தைரியமிருந்தால் வா என அழைத்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காதலியின் அண்ணன் மற்றும் சுல்தான் இருவரும் வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்தியதில் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்தார். இதைத்தடுக்க சென்ற வினோத்தின் நண்பருக்கும் இடது கையில் கத்திக்குத்து விழுந்தது. இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வினோத்குமார் உயிரிழந்த நிலையில், ஒசூர் நகர போலீசார் வினோத்தின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் சந்தோஷ் குமார், சுல்தான் ஆகிய இருவரையும் நகர போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: செல்வா ( ஓசூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.