அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: தோழியை நம்பி ரூ.4.50 லட்சம் ஏமாந்த பெண்!

மோசடி

சுபலட்சுமி வழங்கிய பணி ஆணையை பெற்றுக்கொண்ட சங்கர், அதனை துறை சம்பந்தமான அதிகாரிகளிடம் காட்டிய போது அதிகாரிகள் இந்த நகல் போலியானது என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கர், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.

 • Share this:
  கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  தனது தோழி உட்பட இருவருடம் 5.65 லட்ச ரூபாய் பெற்றுகொண்டு மோசடியில் ஈடுபட்டதோடு போலி பணி உத்தரவு நகல் வழங்கிய  இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (30).  இவரது மனைவி சத்யா( 24). கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்  பொம்மண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுபலட்சுமி (24)  சத்தியாவின்  பள்ளித் தோழி ஆவர். இவர் கடந்த சில வருடங்கள் முன்பு வரை கிருஷ்ணகிரி கோ ஆப்பரேடிவ் காலனியில் வசித்து வந்துள்ளார். சத்யா மற்றும் சுபலட்சுமி இடையேயான பள்ளி கால அதன் பின்னரும் தொடர்ந்துள்ளது.

  இந்நிலையில், கடந்த, 2 வருடங்களுக்கு முன் சத்யாவை தொடர்பு கொண்ட சுபலட்சுமி தனக்கு அரசு அதிகாரிகளிடையே நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கலாம் என மூளைச்சலவை செய்துள்ளார். அதை நம்பி சத்யாவும் தனது கணவருக்கு அரசு வேலை வாங்குவதற்காக 4 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் பணத்தை சுபலட்சுமியிடம் கொடுத்துள்ளார்.

  இந்த நிலையில் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சுபலட்சுமி வேலை பற்றி எதுவும் பேசாததால் சத்யாவும் அவரது கணவரும் சுபலட்சுமியிடம் தொடர்பு கொண்டு வேலை பற்றி கேட்டுள்ளனர் அதற்கு சுபலட்சுமி ஓரிரு மாதங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

  மேலும்  படிக்க: பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய் : மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதா?


  தொடர்ந்து 2 இரண்டு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் சத்யா சுபலட்சுமியிடம் வேலை  வாங்கி தரவில்லை என்றால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.அதற்கு சுபலட்சுமி இறுதியாக கடந்த ஜூன் மாதம் உறுதியாக வேலை வாங்க தருவதாக கூறி ஜூன்21-ம் தேதி கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் வரச்சொல்லி கூறியிருக்கிறார்.  இதனையடுத்து சத்யாவும் அவரது கணவரும் கடந்த ஜூன், 21-ம் தேதி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் வந்துள்ளனர். அப்போது சுபலட்சுமி  அரசு வேலைக்கான உத்தரவு நகல் ஒன்றை வழங்கியுள்ளார். மேலும் இது வருமான வரித்துறையில் உள்ள காலியாக உள்ள அரசு பணிக்கான நகல் என்றும் சுபலட்சுமி கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: உடனே விண்ணப்பியுங்கள்- 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


  இந்த நிலையில் இதை நம்பி அந்த நகலை  பெற்றுக்கொண்ட சத்யாவின் கணவர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்று அந்த வேலைவாய்ப்பு நகலை துறை சம்பந்தமான அதிகாரிகளிடம் காட்டிய போது அதிகாரிகள் இந்த நகல் போலியானது என்று கூறியுள்ளனர்.இதை கேட்டு சத்யாவின் கணவர் சங்கர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

  இதனையடுத்து சத்யாவின் கணவர் சங்கர் இதுகுறித்து  கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலிசாருக்கு புகாரளித்தார்.  அவரது புகாரின் அடிப்படையில் சுபலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலிசார்  சுபலட்சுமியை கைது செய்து விசாரணை செய்ததில் சுபலட்சுமி இதேபோல் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த முத்தையன் என்பவரிடமும் 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளதும் தெரிய வந்தது  இதனையடுத்து சுபலட்சுமியை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர்.

  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: