டேங்கர் லாரி மீது மோதிய ஆம்னி கார்- 9 மாத குழந்தை உட்பட 5 பேர்  பலி

சாலை விபத்து

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 5 பேர்  பலியாகினர்.

  • Share this:
    கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆம்னி வேனில் புறப்பட்டு வேலூர் அருகே உள்ள குடியாத்தம் பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்துள்ளனர். விஷேசம் முடிந்த நிலையில்  இன்று மீண்டும் பெங்களூர் நோக்கி ஆம்னி வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி என்னும் இடத்தில் வந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோரம் நின்று கொண்டிருந்த  கேஸ் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த தீபா, அஞ்சலி  என்ற 34 வயது மதிக்கத்தக்க, இரண்டு பெண்கள், மற்றும் 9 மாத கைக்குழந்தை, ஆம்னி கார் ஓட்டுனர் சுரேஷ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற  4 பேர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்ற போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மற்றொரு பெண்  உயிரிழந்தார். மற்ற 3 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் இந்த விபத்தானது கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா அல்லது கார் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கந்திக்குப்பம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : குமரேசன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: