• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சம் இழப்பு- மனைவி, மகள், தாயைக் கொன்றுவிட்டு நகை வியாபாரி தற்கொலை

பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சம் இழப்பு- மனைவி, மகள், தாயைக் கொன்றுவிட்டு நகை வியாபாரி தற்கொலை

Youtube Video

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட 50 லட்சம் ரூபாய் கடனுக்காக, மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் நகை வியாபாரி ஒருவர்.

  • Share this:
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சொர்ணபூமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான மோகன். இவர், 33 வயதான மனைவி ரம்யா, 10 வயதான மகள் அன்மயா, 61 வயதான தாய் வசந்தம்மாள் ஆகியோருடன் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இவர்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் அதை வேறொருவருக்கு விற்றுள்ளார். அதனால், மோகன் வீட்டைக் காலி செய்வதற்கு, வெள்ளிக்கிழமை கடைசி நாளாக கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

    வியாழக்கிழமை வரை மோகன் வீட்டைக் காலி செய்யாத நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலும் வெகுநேரமாக வீடு திறக்கப்படவில்லை. அதனால், வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர் வந்து பார்த்தபோது வீட்டினுள் மின்விசிறி, டிவி ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தன.

    சந்தேகமடைந்த அவர்கள், தங்களிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மோகன் உள்ளிட்ட நான்கு பேரும் சடலமாகக் கிடந்தனர்.

    அவர்களில் மோகனின் முகத்தில் மட்டும் பிளாஸ்டிக் கவர் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ஓசூர் போலீசார், சடலங்களை மீட்டனர். அப்போது மோகன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

    அதில், தான் ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளியிலும் வங்கியிலும் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், வெளியில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதனால் வேறு வழியின்றி தற்கொலை முடிவு எடுத்ததாகவும், தங்கள் முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் மோகனே விஷம் கலந்து கொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

    மூவரும் இறந்த பின் தானும் விஷமருந்திய மோகன், உயிர் பிழைத்து விடக் கூடாது என்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக சுற்றிக் கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர் போலீசார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: