Home /News /tamil-nadu /

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நாளை தேரோட்டம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நாளை தேரோட்டம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தேரோட்டம்

தேரோட்டம்

ஒசூர் மாநகரின் மலை உச்சியில் உள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் திருவிழா ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை, தேர்ப்பேட்டையில் நடைப்பெற உள்ளதால் விழா ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    ஒசூரில் நாளை சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.  பொதுமக்கள் அச்சமின்றி வழிபாடு மேற்கொள்ள அனைத்து பாதுகாப்பு பணிகளும் செய்யப்பட்டிருப்பதாக டிஎஸ்பி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரின் மலை உச்சியில் உள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவில் திருவிழா ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை, தேர்ப்பேட்டையில் நடைப்பெற உள்ளதால் விழா ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து வருகிறது.

    நாளை நடைப்பெறும் தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கர்நாடக, கேரளா, ஆந்திரா ஆகிய பிற மாநிலத்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம் என்பதால் ஒசூர் டிஎஸ்பி சிவலிங்கம் தேரோட்ட பணிகள், பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஎஸ்பி சிவலிங்கம்,  ஒசூரில் நாளை நடைப்பெற உள்ள தேரோட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிரோன் கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் தலைமையில் 50 போலிசார் சாதாரண உடைகளில் ரோந்தில் ஈடுபடுவதால்
    பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்தார்.

    மேலும்  படிக்க: பாஜகவின் இந்த விமர்சனம் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறந்த பாராட்டு.. உதயநிதி ஸ்டாலின்


    மேலும், தோராட்டத்தின்போது மக்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவங்களில் ஈடுபட காரணமாக உள்ள அதிக ஒலி எழுப்பும் விசில்களை விற்க தடை விதித்துள்ளதாக கூறினார். 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தேரோட்ட திருவிழா காரணமாக ஓசூர் சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: செல்வா - ஓசூர்

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி