Home /News /tamil-nadu /

மண்பாண்டங்கள் குறித்து விழிப்புணர்வு- குட்டி பானையில் பொங்கல் வைத்து அசத்திய கல்லூரி மாணவி

மண்பாண்டங்கள் குறித்து விழிப்புணர்வு- குட்டி பானையில் பொங்கல் வைத்து அசத்திய கல்லூரி மாணவி

சிறிய பொங்கல் பானை

சிறிய பொங்கல் பானை

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவி கையடக்க அளவுள்ள குட்டி மண்பாண்டத்தில் பொங்கல் வைத்து அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின் நகரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஸ்ரீமா. பிபிஏ இறுதியாண்டு படித்துவருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே மண்பாண்ட பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். பொங்கலுக்கு தனது மாமாவிடம் மண்பாண்டங்கள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அவர் மாமா பொங்கல் பானை, மண் அடுப்பு, தோசை தவா, இட்லி சட்டி, பருப்பு சட்டி, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட மண்பாண்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு வகையான சிறிய வகை மண்பாண்டங்கள் அடங்கிய தொகுப்பை வாங்கி கொடுத்துள்ளார்.

    கல்லூரி மாணவி ஸ்ரீமா


    இந்த நிலையில் பொங்கலன்று சிறிய பானையில் பொங்கல் வைத்து அழிந்துவரும் மண்பாண்ட கலையை பாரம்பரியமாக வளர்க்க வேண்டும் என்றும் எதிர்வரும் சந்ததிகளுக்கு இந்த மண்பாண்ட பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்த விழிப்புணர்வு வேண்டும் என்றும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கலிட்டு வழிபாடு செய்ததாகவும் தனது தந்தை தாய் தம்பி உறவினர்களுடன் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

    செய்தியாளர்: செல்வா, ஓசூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Krishnagiri

    அடுத்த செய்தி