தசைநார் சிதைவால் 7 மாத குழந்தை பாதிப்பு: ரூ. 16 கோடி மதிப்பிலான ஊசிக்கு உதவி நாடும் பெற்றோர்

பாதிக்கப்பட்ட குழந்தை

சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது பத்தாயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஏற்படும் அரிய நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும். இதற்கான ஊசியின் விலை ரூ.16 கோடி ஆகும்.

 • Share this:
  கிருஷ்ணகிரி அருகே தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, 7 மாத குழந்தையை காப்பாற்ற, 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி தேவைப்படும் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை கேட்டு ஏழை பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்தவர் 30 வயதான ஜெகன்நாதன். தனது குடும்பத்துடன் குடிசை தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஓசூர் பகுதி பிரியதர்ஷினிக்கும் கடந்த 2020ல் திருமணமானது. இவர்களுக்கு நிதன்யாஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. மூன்று மாதம் வரை பிரச்னை இல்லாமல் இருந்த குழந்தையின் போக்கில் மாற்றத்தை கண்ட பெற்றோர், கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட  இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காண்பித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குழந்தையின் கை, கால்கள் அசைவு இல்லாமலும், தலை நிற்காமலும் இருந்துள்ளது. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தைக்கு மரபணு பாதிப்பினால் ஏற்படும் அரிய வகை எஸ்.எம்.ஏ., (டைப் 1) என்ற தசைநார் சிதைவு நோய் இருப்பது தெரிந்தது. இது பத்தாயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு ஏற்படும் அரிய நோயாகும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும்.

  இதையும் படிங்க: பிளாஸ்டிக் பயன்பாடு: ரூ.1 லட்சம் அபராதம், உரிமம் ரத்து- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
  அமெரிக்காவில் தயாராகும் இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி எனவும் அம்மருந்தை இறக்குமதி செய்ய வரிவிதிக்கப்படுவதால் மேலும் பல கோடிகள் செலவாகும் என்பதாலும் குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தி ஆவதற்குள் மரபணு ஊசி செலுத்தாவிடில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஏழை பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

  இது குறித்து அவர்கள் கூறுகையில், குழந்தையை காப்பாற்ற கோரி தமிழக அரசின் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளோம். மத்திய அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளிக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க: ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு: நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!


  ஏற்கனவே கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ஒருவயது குழந்தை , நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு வயது சிறுமி, தஞ்சாவூர் அடுத்த நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி ஆகியோருக்கும் இந்நோய் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் ஏழு மாத குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: குமரேசன், கிருஷ்ணகிரி
  Published by:Murugesh M
  First published: