ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரசாயன உப்பை சமையல் உப்பு என நினைத்து தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ரசாயன உப்பை சமையல் உப்பு என நினைத்து தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ரசாயன உப்பினை தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ரசாயன உப்பினை தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

7-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்கள் ஆய்வகத்திற்கு நேற்று சென்றனர். அங்கு சாதாரண உப்பு போன்றே காட்சி அளிக்கும் ரசாயன உப்பை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிரியர்களின் அலட்சியத்தால் ஆய்வகத்தில் இருந்த ரசாயன உப்பை சமையல் உப்பு என நினைத்து தின்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 950 மாணவர்கள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் அங்கு 7-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்கள் ஆய்வகத்திற்கு நேற்று சென்றனர்.

  அங்கு சாதாரண உப்பு போன்றே காட்சி அளிக்கும் ரசாயன உப்பை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து மாணவர்களை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

  பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். .அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  போலீசாரின் விசாரணையில் ஆய்வகத்தில் மெக்னீஷியம் பாஸ்பேட், மற்றும் FERRIC CHLORIDE ஆகியவற்றை மாணவர்கள் சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

  Also read... மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு - உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை..

  முன்னதாக, மாணவர்களின் பெற்றோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் வழிகாட்டுதல் இல்லாததால் இச்சம்பவம் நடந்ததாக பெற்றோர் குற்றமசாட்டியுள்ளனர்.

  -செய்தியாளர்: குமரேசன்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Krishnagiri, School students