• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஃபேஸ்புக் காதலனை தேடி வந்த கேரள பெண்.. கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை

ஃபேஸ்புக் காதலனை தேடி வந்த கேரள பெண்.. கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணை

கேரள பெண்

கேரள பெண்

பேஸ்புக் காதலனை தேடி வந்த பெண் கிருஷ்ணகிரியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

  • Share this:
    கிருஷ்ணகிரி அருகே முகம் எரிக்கப்பட்ட நிலையில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் பகுதியில் இன்று மாலை முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் படி காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், முகம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சனி,  (வயது25) என்பது தெரியவந்தது.

    Also Read: சூடு பிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒரு இளைஞரை கைது செய்தது சிபிஐ 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா, 22 என்ற வாலிபர், ஐந்து வருடங்களாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் பழகிவந்துள்ளதாக கூறப்படுகிறது. கார் டிரைவரான சூர்யா கேரளாவிற்கு சென்று நகை, பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also Read: திருமண ஆசைக்காட்டி பெண்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டல் - கம்பி எண்ணும் மோசடி மன்னன்

    சூர்யாவை தேடி ரஞ்சனி அவரது ஊருக்கு வந்த நிலையில், அவருக்கு  ஏற்கனவே திருமணமானது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கேரளாவுக்கு திரும்பாமல் காவேரிப்பட்டிணம் சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்த நிலையில், இன்று முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா அல்லது கொலையா என  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: குமரேசன் ஆறுமுகம் (கிருஷ்ணகிரி) 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: