ஓசூரிலிருந்து மாநிலத்துக்குள் நுழைந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூவை கொடுத்து அறிவுரை வழங்கிய கர்நாடகா காவல்துறை

ரோஜாப்பூ கொடுக்கும் கர்நாடகா காவல்துறை

முழு ஊரடங்கை மீறி மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து கர்நாடாக மாநில காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

  • Share this:
முழு ஊரடங்கில் ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வழியாக இருசக்கர வாகனத்தில் தடையை மீறி சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் வெளியே வர வேண்டாம் என அன்போடு கர்நாடகா காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று தமிழ் மாநில எல்லையான ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குறுக்கு வழிகள் மூலமாக கர்நாடகாவிற்கு செல்லமுயன்றனர். அப்படி கர்நாடகாவுக்குள் செல்ல முயன்றோர் மீது தடியடி நடத்தாமல், விழிப்புணர்வு ஏற்ப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்தநிலையில், ஓசூர் பகுதிகளிலிருந்து கர்நாடகாவிற்கு சென்ற வாகன ஓட்டிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் ரோஜா மலர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி பெருந்தொற்று காலங்களில் வெளியில் செல்ல வேண்டாமென விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: