தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஒசூரை சார்ந்த 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, அறிவியல் திறன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 35 பள்ளிகளை சேர்ந்த 771 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்ற தனியார் பள்ளி மாணவர் கிஷோருக்கு ரூ51,000 பணபரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இரண்டாவது பரிசு பெற்ற ஜுலி ஜாய்க்கு 25,000 ரூபாயும், மூன்றாவது பரிசு பெற்ற நிக்கிதாவுக்கு 10,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூர் இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘விண்ணுக்கு செயற்கைகோள் அனுப்புவதில் பலமுறை வெற்றி கண்டு உள்ளோம். அதே போல் வருங்காலத்திலும் விண்ணுக்கு செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்புவோம். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோதனை முயற்சியாக ஆள் இல்லாத ககன்யான் செயற்கோள் விரைவில் விண்ணுக்கு அனுப்பபடும்.
தொடரும் கைதுகள்: மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
மாணவ, மாணவிகள் தாங்கள் என்ன ஆகவேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது. அவர்கள் விரும்புவது செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த அறிவியல் திறன் போட்டியில் அரிமா சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: செல்வா, ஓசூர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.