கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் முதன்முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சிவலிங்கபுரம் கிராமத்தில் மென் பொறியாளர் தினேஷ் மற்றும் மென் பொறியாளர் ஜனக நந்தினி இருவருக்கும் 6ஆம் தேதி ஞாயிறு காலை திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 அளவில் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மறைந்த ஜனக நந்தினியின் தந்தை ராமசாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரையும் திரையில் தோன்றி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் லிங்க் வழியாக உறவினர்கள் நண்பர்கள் இதன் வாயிலாக உள்ளே சென்று தங்களுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்தனர்.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
அரசியல் தலைவர்களும் திரையில் தோன்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நெட்வொர்க் இல்லாத மலை கிராமங்களில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து மணமகன் தெரிவிக்கையில், இந்தியாவில் முதன்முறையாக இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம். கிராமப்புறங்களில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்துவது பெரிய சவாலாக இருந்தது. இருந்தபோதிலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.