Home /News /tamil-nadu /

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை - ஓசூரில் பயங்கரம்

மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை - ஓசூரில் பயங்கரம்

ஓசூரில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

ஓசூரில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து கழுத்தறுத்து கொலை செய்து தப்பி ஓடிய கணவன் போலீசுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

    ஓசூர் அருகே இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணகிரி  மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கீழ் கொச்சாவூர் மலை கிராமத்தில் வசிப்பவர் பசப்பா( வயது 40). கூலி தொழிலாளி இவருக்கு திருமணமான நிலையில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் மேல் கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த மாதேவி (வயது 32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாதேவி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    Also Read: பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை - உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

    இந்நிலையில்  பசப்பா - மாதேவி இருவரும் கடந்த 6 மாதங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மாதேவி  நடத்தையின் மீதான சந்தேகத்தால் பசப்பா அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில்  தாய் வீட்டிற்கு சென்ற மாதேவி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பசப்பா  நள்ளிரவு மாதேவியை கழுத்தறுத்து கொலை செய்து தலைமறைவானார்.

    ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை காலையில்  உறவினர்கள் பார்த்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த மாதேவியின் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    தலைமறைவாகயிருந்த பசப்பாவை அஞ்செட்டி போலீசார் தேடி வந்ததனர்.

    Also Read:  தாய் தந்தையை கொன்று நாடகமாடிய மகன்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

    இந்நிலையில் தனது சொந்த ஊரான கீழ் கொச்சாவூர்  வனப்பகுதியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து  கொய்யா மரத்தில் பசப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடம் சென்று பசப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: செல்வா (ஓசூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Hosur, Illegal affair, Krishnagiri, Murder, Tamil News

    அடுத்த செய்தி