உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவன்; கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய 3வது மனைவி..

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய 3வது மனைவி.

முனியம்மாள் தனது கள்ளக்காதலன் குமாரிடம் தனது கணவர் ராஜேந்திரன் இருக்கும் வரை நாம் இருவரும் சந்தோசமாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கிருஷ்ணகிரியில் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மூன்றாவது மனைவி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் காவேரிப்பட்டணம் பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் முதல் மனைவி ஜெயா (45), இரண்டாவது மனைவி தவமணி (38), மூன்றாவது மனைவி முனியம்மாள் (35). இதில் முதல் இரண்டு மனைவிகளும் குடும்ப பிரச்சனையால் ராஜேந்திரனை விட்டு பிரிந்து விட்டனர்.

  தற்போது ராஜேந்திரன் தனது மூன்றாவது மனைவி முனியம்மாளுடன் வாழ்ந்து  வருகிறார். இந்த நிலையில்  கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (33). இவர் செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் ராஜேந்திரனின் மனைவி முனியம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ராஜேந்திரன் கூழ் வியாபாரத்திற்காக அதிகாலையிலேயே சென்று விடுவார். இந்த நிலையில் அவரது மனைவி முனியம்மாளும், குமாரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது கள்ள தொடர்பு  ராஜேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேந்திரன் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.

  இந்த நிலையில் இதுகுறித்து முனியம்மாள் தனது கள்ளக்காதலன்  குமாரிடம் தனது கணவர் ராஜேந்திரன் நமது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக  உள்ளதாகவும், மேலும் அவர் இருக்கும் வரை நாம் இருவரும் சந்தோசமாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் முனியம்மாள் மற்றும் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

  ராஜேந்திரன் தினமும் அதிகாலையில் கூழ் வியாபாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். இதனை குமார் மற்றும் அவரது நண்பர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று ராஜேந்திரன் வழக்கம்போல் அதிகாலையில் கூல் வியாபாரம் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காவேரிபட்டிணம் அருகில் உள்ள வேங்கை நகர் என்னும் இடத்தில்  குமார் மற்றும் அவரது நண்பர்கள் அவரை வழிமறித்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

  இதுகுறித்து  தகவலறிந்து வந்த காவேரிப்பட்டினம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குமார் மற்றும் ராஜேந்திரனின் மனைவி முனியம்மாள் ஆகிய இருவருக்கும் கள்ளதொடர்பு இருந்து வந்ததாகவும், இதனை ராஜேந்திரன் கண்டித்ததால் ராஜேந்திரனை குமார் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை  கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

  Also read: டாஸ்மாக்கில் மதுபாட்டிலை வாங்கியதும் சென்றுவிடுவார்கள்; டீக்கடையில் அப்படியில்லை.. திருநாவுக்கரசர் எம்.பி.

  இதனையடுத்த காவேரிபட்டனம் காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம் தலைமையிலான போலிசார் முனியம்மாள், கள்ளக்காதலன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் பவுன்ராஜ், திருப்பதி, ரகு, பார்த்திபன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குமாரின் நண்பர்கள் வடிவேல் மற்றும் சதிஸ் ஆகிய இருவரையும் போலிசார் தேடி வருகின்றனர்.

  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர் - ஆ.குமரேசன்
  Published by:Esakki Raja
  First published: