ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஹெலிகாப்டரில் மலர்தூவி நடந்த கோயில் கும்பாபிஷேகம்.. வியந்துப்பார்த்த பக்தர்கள்

ஹெலிகாப்டரில் மலர்தூவி நடந்த கோயில் கும்பாபிஷேகம்.. வியந்துப்பார்த்த பக்தர்கள்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் கோயிலின் கோபுர கலசங்கள் மீது தூவப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒசூர் அருகே தர்மராஜா கோயில் கும்பாபிஷேக விழாவில்  ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி வழிபாடு செய்தனர்.

ஒசூர் அருகேயுள்ள டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமைவாய்ந்த தர்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக புரணமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. 3.5 கோடி ரூபாய் செலவில் கோயில் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் கோயிலின் கோபுர கலசங்கள் மீது தூவப்பட்டன.

Also Read: 'நோட்டு வலை வீசி ஓட்டு வாங்கும் காலம் இது' - டி.ராஜேந்தர் ஆதங்கம்

ஹெலிகாப்டர் கோயிலை சுற்றி பல முறை வட்டங்கள் அடித்து மலர்களை கோபுரத்தின் மேல் தூவியது. இந்த கும்பாபிஷேக விழாவில் டி.கொத்தப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவியதை பலரும் இமைக்காமல் பார்த்தனர்.பொதுமக்கள் இந்தக்காட்சியினை தங்களது செல்போனில் படம் படித்தனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

செய்தியாளர்:  செல்வா  (ஓசூர்)

First published:

Tags: Festival, Hindu Temple, Hosur, Tamilnadu