கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த கணேசன், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தையிடம் இருந்து ஓவியம் வரையவும், தமிழ் எழுத்துக்களை சரளமாக பின்வரிசையில் தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்ட கணேசன், தற்செயலாக இணையதளத்தில் ஒருவர் ஒரு நிமிடத்தில் ஆங்கிலத்தில் 20 எழுத்துக்களை தலைகீழாக எழுதியதே சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தையே எழுத முடிவுசெய்த கணேசன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகளின் ஆங்கில பதிப்பான விங்ஸ் ஆப் பையர் ("WINGS OF FIRE" ) புத்தகத்தை தேர்வு செய்து தலைகீழாக எழுதத் தொடங்கினார்.
மேலும் படிக்க... ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடம்- பதக்கப்பட்டியல்
வேலைப்பளுவுக்கு மத்தியில் இரவு நேரங்களில் நேரம் ஒதுக்கி எழுதி வந்த இவர், 180 பக்கங்களை கொண்ட புத்தகத்தை 45 நாட்களில் எழுதி முடித்தார். அவர் எழுதிய எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு பார்த்தால் மட்டுமே கண்ணாடியில் அவரது எழுத்துக்களின் பொருள் புரிய வரும். கணேசனின் இந்த முயற்சியை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்டு ரெக்கார்ட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளன.
மேலும் படிக்க... மச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
தனது கணவரின் கடின முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஒசூர் மாநகருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் கணேசனின் மனைவி தெரிவிக்கிறார். மேலும் இந்த சாதனை முயற்சியினை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் கணேசனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: APJ Abdul Kalam, Krishnagiri