Home /News /tamil-nadu /

ஓசூரில் நள்ளிரவில் பற்றி எரிந்த லாரி - போலீஸ் விசாரணை

ஓசூரில் நள்ளிரவில் பற்றி எரிந்த லாரி - போலீஸ் விசாரணை

லாரி விபத்து

லாரி விபத்து

விபத்துக்குள்ளான லாரி தீப்பற்ற தொடங்கியதும் டிரைவர் தப்பி ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நள்ளிரவு கடப்பாக்கல் ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளாகி லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.

    சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோவிந்தன் (வயது 30 ) தெலுங்கானா மாநிலம் தாண்டூர் என்ற பகுதியிலிருந்து 30 டன் கடப்பாக்கலை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோட்டயம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.  ஓசூர் வழியாக வந்தபோது தின்னப்பள்ளி என்ற இடத்தில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

    இதன்காரணமாக லாரி நடுரோட்டில் நின்றது. இந்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதமடைந்தது. லாரியில் தீப்பற்ற தொடங்கிய போது டிரைவர் தப்பி ஓடியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. லாரியின் மதிப்பு ரூபாய் 40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    செய்தியாளர்: செல்வா ( ஓசூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Fire accident, Hosur, Krishnagiri, Police, Tamil News

    அடுத்த செய்தி