Home /News /tamil-nadu /

ஓசூரில் ஃபைனான்சியர் வெட்டிப் படுகொலை.. உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா என விசாரணை..

ஓசூரில் ஃபைனான்சியர் வெட்டிப் படுகொலை.. உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா என விசாரணை..

பைனான்சியர் உதயகுமார்

பைனான்சியர் உதயகுமார்

Hosur: ஓசூரில் ஃபைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ஓசூரில் முன்விரோதம் காரணமாக பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 33). இவருக்கு திருமணமாகி வனிதா (வயது 30)  என்ற  மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். உதயகுமார் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு மதுபோதையில் இருந்த உதயகுமார் வீட்டிற்கு அருகில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். வீட்டில் எதிரில் இருந்த சாலையை கடந்து மறுபுறம் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்று சூழ்ந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.

    Also Read: மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி வரி பாக்கி? - RTI மூலம் அம்பலம்

    உதயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  மத்திகிரி காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் உதயகுமாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    Also Read: காதலித்த திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் தற்கொலை

    காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், “ கொலை செய்யப்பட்ட உதயகுமார், அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்ய முயன்றதாக, அவர் மீது மத்திகிரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதயகுமார் அவரது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்துள்ளார்.

    எனவே இந்த கொலை உள்ளாட்சி தேர்தல் போட்டி காரணமாக ஏற்பட்டதா?  அல்லது பழைய முன் விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து மத்திகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்:  செல்வா (ஒசூர்)

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Murder, Police

    அடுத்த செய்தி