ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓசூர் திரௌபதி கோயில் திருவிழா- மூன்று மாநில மக்கள் பங்கேற்று வழிபாடு

ஓசூர் திரௌபதி கோயில் திருவிழா- மூன்று மாநில மக்கள் பங்கேற்று வழிபாடு

ஓசூர் கோயில் திருவிழா

ஓசூர் கோயில் திருவிழா

ஓசூரிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் மூன்று மாநில மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ திரெளபதி தர்மராஜா கோவிலில் பல்லக்கு உற்சவம் திருவிழா கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தர்மராஜா மகா பூங்கரகம் பூசாரி பவன்குமார் சுமந்து வர சிறப்பான முறையில் நடைபெற்றது. திருவிழாவில் பூ பச்சை கரகத்தை தலையில் சுமந்தபடி ஆடிய பவன் குமார் பூசாரி கோவிலின் முன் தோண்டப்பட்டதீக்குழியில் நடனமாடியபடி இறங்கினர்.

அவரைத் தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மேலும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கியவாறு கத்திபோட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள கோயில் அடங்கிய முக்கிய வீதிகளில் பக்தர்கள் மத்தியில் கோவிந்தா கோபாலா என்ற முழக்கத்துடன் சென்றது.

பின்னர் ஓசூர் பகுதிகளில் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் பூப்பல்லக்கு உற்சவம் ஓசூரில் முக்கிய வீதிகளான மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை, ஏரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர், முருகர், கோட்டை மாரியம்மன், சந்திரசூடேஸ்வரர், சனீஸ்வர பகவான் வெங்கடாஜலபதி, சிவன், பார்வதி மாசாணி அம்மன் உள்ளிட்ட 30கும் மேற்பட்ட கிராம தேவதைகள் பல்லக்கு அலங்கார ஊர்வலம் வெகு விமர்சியாக இரவு முழுவதும் நடைபெற்றது.

இந்த பூப்பல்லக்கு விழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி திரெளபதி தர்மராஜா சுவாமியின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Hosur