கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். அவருக்கு வயது 46. கூலி தொழிலாளியான இவர் கண்பார்வை குறைப்பாடு காரணமாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நாளுக்கு நாள் கண் பார்வை குறைந்து வலி அதிகரித்த நிலையில் ஓசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கரும்பூஞ்ஜை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 4 மணி நேர சிகிச்சைக்கு பின் வலது கண் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தரவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘10 இலட்சம் பேரில் ஒருவருக்கு தாக்கக்கூடிய
கரும்பூஞ்ஜை பசவராஜ் அவர்களுக்கு மூக்கு வழியாக கண் பகுதிக்கு பரவி கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பல சிகிச்சைக்கு பிறகு தங்களது மருத்துவமனைக்கு வந்ததாகவும் இதனால் அவரின் வலதுபுற கண் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து மருத்துவர் நிகில் தலைமையிலான மருத்துவக்குழு 4 மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவரின் வலது கண் முழுமையாக அகற்றப்பட்டதுடன்
கரும்பூஞ்ஜையும் அகற்றப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மற்ற தனியார் மருத்துவமனைகளில் 1.50 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டிய நிலையில் இந்த மருத்துவமனையில் 40 ஆயிரம் ரூபாயில் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டதாக தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு, சர்க்கரை நோய் உள்ளிட்டவர்களுக்கு கரும்பூஞ்ஜை அதிகஅளவில் பாதிப்பு ஏற்ப்படுத்தும் என கூறிய அவர்
கண், முகம் வீக்கம், கருப்பு நிறத்தில் சளி வெளியாவது கரும்பூஞ்ஜை பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி என தெரிவித்தார்.
செய்தியாளர்: செல்வம்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.