Home /News /tamil-nadu /

ஹிஜாப் விவகாரம் : ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஜமாத் அமைப்புகள் முடிவு

ஹிஜாப் விவகாரம் : ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஜமாத் அமைப்புகள் முடிவு

ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அனைத்து ஜமாத் சங்க தலைவர் சையத் இர்ஃபான் உல்லா உசேன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜமாத் சங்கத்தலைவர் இந்திய அரசியலமைப்பு சட்டம் 25 மூலம் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    எல்லா மதத்தினரும் அவரவர்கள் மதச் சின்னங்களை அணியலாம். நாங்கள் வேறு மதத்தினரின் மத அடையாள சின்னங்கள் அணிய வேண்டாம் என்று எப்போதும் சொல்லவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைக்கு எதிரானதாகும்.

    ALSO READ |  டீசல் திருட்டு கும்பல் அட்டூழியம் ... தட்டிக்கேட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
     முகத்திரை என்னும் ஹிஜாப் அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்த அவர், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்ற 19ஆம் தேதி கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் அமைப்புகள் சார்பிலும் அரசியல் கட்சிகள் இணைந்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

     

    செய்தியாளர் : ஆ.குமரேசன் , கிருஷ்ணகிரி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Hijab, Krishnagiri, Muslim

    அடுத்த செய்தி