• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை..!

கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை..!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இரவு திடீரென மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் ஓடியது.

  • Share this:
    கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

    கிருஷ்ணகிரியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிபட்டினம், ஊத்தங்கரை, வேப்பனபள்ளி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    கடந்த சில தினங்களாகவே  கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இரவு திடீரென மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் ஓடியது. இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலையில் மழை நீர் கரை புரண்டு ஒடியது. சீதோஷன நிலை சில்லென மாறியுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தியாளர்: ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி) 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: