Home /News /tamil-nadu /

கிருஷ்ணகிரியில் பனங்காடு உருவாக்கும் அரசின் முன்னோடித் திட்டம்

கிருஷ்ணகிரியில் பனங்காடு உருவாக்கும் அரசின் முன்னோடித் திட்டம்

பனை நாற்று உற்பத்தி பணி

பனை நாற்று உற்பத்தி பணி

Palmyra Trees: தமிழகத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.

  • News18
  • Last Updated :
    தமிழக அரசு முன்னோடித் திட்டமாக பனங்காடு உருவாக்கும் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தவுள்ளது. இதற்காக 55 ஆயிரம் பனை நாற்றுகளை தயார் செய்யும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டின் மாநில மரம் என போற்றப்படுவது பனை மரம். கற்பூர விருட்சம் என கூறப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அத்துடன், பனை ஓலை அலங்காரப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களின் எண்ணிக்கை, இந்தியாவில் மொத்தம் 10.2 கோடி உள்ளன. இதில், 5.87 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.

    உணவுப் பொருட்களாக இருந்ததுபோய் காலப்போக்கில் பனை மரங்களை செங்கல் சூளை உள்ளிட்டவற்றுக்கு விறகுகளாக பயன்படுத்துவது அதிகரித்தது. மேலும், சாலை விரிவாக்க பணிக்காகவும் பல்வேறு மரங்கள் அழிக்கப்பட்டு வருதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை பாதுகாக்கவும், புதிய பனை மரங்களை உற்பத்தி செய்து வளர்க்கும் நோக்கிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்துறை மூலம் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பனை நாற்றுகளை அரசு உற்பத்தி செய்துள்ளது.

    Also read... குண்டர் சட்டம் ரத்து.. ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு தாக்கல்..

    2021 ஜூலை மாதம் 80,000 பனை விதைகள் வாங்கப்பட்டு, வனத்துறைக்கு சொந்தமான போலுப்பள்ளி, கூசுமலை மற்றும் ஓசூர் உள்ளிட்ட நர்சரி பண்ணைகளில் நடப்பட்டன. கடந்த 10 மாதங்களாக 50 வன ஊழியர்களைக் கொண்டு முறையாக உரங்கள் செலுத்தி தண்ணீர் விட்டு பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பனை நாற்றுகள் அனைத்தும் ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    பனை நாற்றுகள் உற்பத்தி செய்ய தேவையான நிதிகளை சிப்காட் தொழிற்பேட்டை வழங்கியுள்ளது. இதன் மூலம் பனை நாற்றுகள் நடப்பட்டு கிருஷ்ணகிரியில் புதிய பனங்காடு உருவாக்கப்பட உள்ளது.

    -செய்தியாளர்: குமரேசன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Krishnagiri

    அடுத்த செய்தி