கொரோனா பரவல் அதிகரிக்க முந்தைய அதிமுக அரசே காரணம்: அமைச்சர் ஆர்.காந்தி குற்றச்சாட்டு

அமைச்சர் ஆர்.காந்தி

கொரோனா பரவல் அதிகரிக்கவும், அதிக உயிரிழப்பு ஏற்படவும் காரணம் தேர்தல் சமயத்தில் இரண்டு மாதம் அரசு கொரோனா பணியை கவனிக்காதது தான் என குற்றம்சாட்டினார்.

 • Share this:
  தமிழகத்தில் தற்போது அதிக அளவில் கொரோனா பரவ கடந்த அதிமுக அரசே காரணம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் தடுப்பு பணிக்கு தேவையான கட்டமைப்புகள் குறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கேட்டறிந்தார்.

  ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இதற்கு முன் எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகின்றது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி பேதம் இல்லாமல் அனைவரின் ஆலோசனைகளை ஏற்றுகொண்டு வருகிறார்.

  அதன்படி  நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது தொடர்ந்து அந்த அடிப்படையில் அனைத்து தேவைகளும் மாவட்டத்திற்கு பூர்த்தி செய்யப்படும் என்றார். தொடர்ந்து மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஒரு சில மருத்துவ மனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்றுகொள்ளவில்லை என்ற தகவலின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் மக்கள் முறையான ஆவணங்களும், பதிவும் இல்லாமல் சென்றுள்ளது தெரியவந்தது என்றார்.

  மேலும் பொறுப்பேற்ற 15 நாட்களில் இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின், தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கவும், அதிக உயிரிழப்பு ஏற்படவும் காரணம் தேர்தல் சமயத்தில் இரண்டு மாதம் அரசு கொரோனா பணியை கவனிக்காதது தான் என குற்றம்சாட்டினார். அந்த இரண்டு மாதம் ஆட்சி சரியாக இருந்திருந்தால் இந்த அளவில் பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்காது.

  Read More:   ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வடமாநில தொழிலாளர்கள்; கோதுமை மாவு கொடுத்து உதவும் மதுரைக்காரர்கள்!

  தற்போது முதல்வராக ஸ்டாலின் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த மறு நாள் மாலை முதல் தனது பணியை துவங்கி தற்போது வரை தீவிரமாக பணியாற்றி வருகிறார். திமுக எப்பொழுதும் மக்கள் இயக்கம், இந்த கொரோனா சமயத்தில் எங்கு தவறு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிச்சயமாக முதல்வர் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவார் என தெரிவித்தார்.

  இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், கே.பி.முனுசாமி, அசோக்குமார், தமிழ்செல்வம், ராமசந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  கிருஷ்ணகிரி செய்தியாளர் குமரேசன் ஆறுமுகம்
  Published by:Arun
  First published: