ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

அவ்வழியாக வந்த ஒற்றை யானை குண்டாப்பாவை துரத்தியுள்ளது. இதையடுத்து, அவர் யானையிடன் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

 • Share this:
  ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தளி அருகே  உளிபண்டா கிராமத்தில் வசிப்பவர் குண்டப்பா(63) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள பயிர் பாதுகாப்பிற்கு சென்றுள்ளார்.

  இந்நிலையில் இன்று காலை கிராமத்திற்கு ஒத்தையடி பாதையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை யானை குண்டாப்பாவை துரத்தியுள்ளது. இதையடுத்து, அவர் யானையிடன் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். எனினும், யானை தும்பிக்கையால் தூக்கி வீசி காலல் மிதித்ததாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதை அறிந்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஜவளகிரி வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், தளி போலீசார் சென்று குண்டப்பாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Also read: Neet Exam: நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டும் தீர்வாகாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  இறந்த குண்டப்பாவிற்கு வெங்கடம்மா என்ற மனைவியும், பசுராஜ் என்ற மகனும் உள்ளனர். உயிரிழந்த குண்டப்பா வின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரண நிதியாக 50,000 காசோலையை வனத்துறை அதிகாரிகள் குண்டப்பாவின் குடும்பத்தாரிடம் வழங்கினர்.

  செய்தியாளர் - செல்வா
  Published by:Esakki Raja
  First published: