Home /News /tamil-nadu /

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது அ.தி.மு.க அரசு - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது அ.தி.மு.க அரசு - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

கிருஷ்ணகிரியில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை 7.5% உள் ஒதுக்கீடு மூலம் அ.தி.மு.க அரசு நனவாக்கியது என்று தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தளப்பள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ள அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரைக்கு சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றி, ரிப்பன் வெட்டி மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தனர்.

    விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் மருத்துவக்கல்வியை கனவாக கொண்ட மாணவர்களுக்கு கடந்தாண்டு 400-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கும் இந்தாண்டு 541 ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மூலம் நினைவாக்கியது அ.தி.மு.க அரசின் சாதனை. உலகிலேயே வலுவான மருத்துவ கட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்கியது அதிமுக அரசு தான் என்று பேசினார்.

    தொடர்ந்து பேசிய அவர் கடந்த 4 ஆண்டுகளில் 31,244 மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தும், 23 மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி அதிமுக அரசு சாதனை படைத்துள்ளதாக பேசினார். மேலும் இந்த கல்லூரியின் நிறுவனர் தம்பித்துரையின் கல்வி சேவை மூலம் 35,800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

    அதிமுக ஆட்சியில் 7 சட்டகல்லூரிகள், 21 பல்கலை தொழில் நுட்ப கல்லூரி, 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 23 மருத்துவக் கல்லூரிகள் துவங்கி சாதனை படைத்துள்ளதாக பேசினார்.

    வைகோவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

    தொடர்ந்து 33 விழுக்காடாக இருந்த உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிமுக அரசு தரமான கல்வி வழங்கியதின் விளைவாக 51 விழுக்காடாக உயர்ந்து நாட்டில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மேலும் எம்.பி தம்பிதுரையின் கடுமையான முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என்று பேசினார்.

    செய்தியாளர்: செல்வா, ஓசூர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Edappadi Palaniswami, O Panneerselvam

    அடுத்த செய்தி