கிருஷ்ணகிரி அருகே திரெளபதி அம்மன் ஆலய திருவிழா கோலாகலம்... ஒப்பாரி வைத்து துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்வு..
கிருஷ்ணகிரி அருகே திரெளபதி அம்மன் ஆலய திருவிழா கோலாகலம்... ஒப்பாரி வைத்து துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்வு..
திரெளபதி அம்மன் ஆலய திருவிழா
Krishnagiri District : கிருஷ்ணகிரி அருகே நடந்த திரெளபதி அம்மன் ஆலய திருவிழா - துரியோதனன் படுகளம் செய்து துடைப்பத்தால் அடித்து அருள்பாலித்த வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே கூளியம் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிழா கடந்த 20 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தருமபுரி அருள்ஜோதி நாடக சபை சார்பில் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது.
மகாபாரத இதிகாச புராணத்தில் பாண்டவர்கள் திரெளபதிவுடன் வனவாசம் சென்று 18 ஆண்டுகள் தவமிருந்து பிறகு துரியோதனன் படுகளம் செய்தும் திரெளபதியின் துயில் முடியும் நிகழ்வும் அதை தொடர்ந்து துரியோதனன் மனைவி ஒப்பாரி வைத்து துடைப்பத்தால் அடிக்கும் புராதன கதையை எடுத்துரைக்கும் வகையில் தெருக்கூத்து கலைஞர்கள் 18 நாட்கள் மகாபாரத நிகழ்ச்சி நடத்தினர்.
இறுதி நாளான இன்று துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.திரெளபதி அம்மன் கோவில் எதிரே சுமார் 40 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவபெம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள் சொற்பொழிவு ஆற்றினர். இறுதியில் பீமனும் அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் நடத்தப்பட்டு இறுதியில் அர்ச்சுனன் போர் வாலால் துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டுருந்த திரெளபதி அம்மன் தேர் துரியோதனன் உடல் மீது வைத்து திரெளபதி சப்தம் நிறைவேறும் வகையில் துயில் முடியும் நிகழ்வும் அதை தொடர்ந்து துரியோதனன் உடலின் மீது ஏறி மீதித்து படுகளமும் செய்தனர். பின்னர் துரியோதனன் மனைவி படுகளம் செய்யப்பட்ட துரியோதனன் உடலின் அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்தும் அதை தொடர்ந்து துடைப்பத்தால் அடித்து அருள் பாலிக்கும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த துரியோதனன் படுகளம் செய்யும் போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரதம் திருவிழா நிறைவு பெற்றது. இப்படி 18 நாட்கள் மகாபாரதம் நடத்துவதின் மூலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் நொடிகள் நீங்கும் குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மழை பொழியும் நன்மைகள் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் நடத்தப்படுகிறது.
இந்த மகாபாரத விழாவை கடந்த 18 நாட்களாக அம்மனேரி,சவுளூர், ஒம்பலக்கட்டு,ஆகிய மூன்று கிராம மக்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கிருந்து கண்டு மகிழ்ந்தனர்.
ஆ.குமரேசன், கிருஷ்ணகிரி செய்தியாளர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.