ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே டொயோட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த், கிருஷ்ணா, வெங்கடேஷ், சத்யராஜ் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் நிர்வாகம் அவர்களை வெளியேற்றியது.
இதையும் படிங்க: பெண் எஸ்.ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி -அரியலூரில் பரபரப்பு
இதனால் அவர்கள் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காத விரக்தியில் மீண்டும் அதே நிறுவனத்தில் உள்ள 70 அடி உயர புகைபோக்கி மீது ஏறி மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பும் அச்சமும் காணப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கீழே இறங்கிய தொழிலாளர்களுடன் பணி வழங்குவது குறித்து நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓசூர் செல்வா
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.