கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் பெல்லட்டி சாலையில் தாபா உணவகம் நடத்தி வருபவர் ரஞ்சிதா (வயது 25). இந்நிலையில், சூளகிரி காவல் நிலைய முதல்நிலை காவலராக பணிபுரியும் முருகானந்தம் (25), மாரியப்பன்(30). இவர்கள் இருவரும் தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.
அந்த புகாரில், சூளகிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முருகானந்தம், மாரியப்பன் ஆகிய இருவரும் தான் நடத்தி வரும் உணவகத்திற்கு அடிக்கடி வந்து சாப்பாடு வாங்கி சென்றதாகவும், பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த மே 4ல் உணவகத்திற்கு வந்த அவர்கள், கர்நாடக மதுவகைகளை விற்பதாகவும், கஞ்சா பொட்டலம் விற்பதாகவும் பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டி, தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால், தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
Must Read : வானிலை தகவல் தொடர்பாக யூ டியூப் தொடங்கி சாதனை படைக்கும் மாணவர் - விவசாயிகளுக்காக வானிலை செயலியை உருவாக்க முயற்சி
இது குறித்து ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் - செல்வா, ஓசூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.