Home /News /tamil-nadu /

மத்திய அரசுடன் சண்டைப்போக்கை விட்டு ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் - எச்.ராஜா

மத்திய அரசுடன் சண்டைப்போக்கை விட்டு ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் - எச்.ராஜா

எச்.ராஜா

எச்.ராஜா

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக 6 மாதங்களில் குறைந்தது வடிகால்களை சீர்செய்திருக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

    மத்திய அரசு உடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என எச். ராஜா கூறியுள்ளார். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாமில் பாஜகவின் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2011 திமுக ஆட்சியில் 630 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டபோதும் 2015-ல் மிகப்பெரிய பாதிப்பு ஏற்ப்பட்டது. ஆட்சிக்கு வந்த திமுக 6 மாதங்களில் குறைந்தது வடிகால்களை சீர்செய்திருக்க வேண்டும்.

    நீட்தேர்வு குறித்து அரசியல் பிதற்றல்களை  தாண்டி பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இனி நீட் தேர்வு குறித்து அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்தில் 3 வேளைகள் மட்டுமே சரியாக செய்யப்படுகிறது மத்திய அரசின் உதவியால் தடுப்பூசி செலுத்தும் பணி, ரேசன் கடையில் 5கிலோ அரிசி,1கிலோ பருப்பு மற்றும் 10வது முறையாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படுவதை தவிர எதுவுமில்லை.

    Also Read: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    கோவில் கோவிலாக சென்ற ஸ்டாலின், சேகர்பாபுவின் செயலை நீதிமன்றம் தடுத்துள்ளது. திமுக ஆட்சியில் பொய், போலி, பிரிவினைவாதம் மட்டுமே உள்ளது என்பதால் மத்திய அரசு உடனான சண்டைப்போக்கை கைவிட்டு சண்டைக்காரர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் தூபம் போட்டாலும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்” எனக் கூறினார்.

    செய்தியாளர்: செல்வா( ஒசூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Chennai flood, Chennai rains, DMK, HRaja, MKStalin

    அடுத்த செய்தி