கிருஷ்ணகிரியில் 18,973 லிட்டர் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம்... ஊழியர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும் - அமைச்சர் நாசர்
கிருஷ்ணகிரியில் 18,973 லிட்டர் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம்... ஊழியர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும் - அமைச்சர் நாசர்
பால்
கிருஷ்ணகிரி ஆவின் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 25,000 லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து கடந்த 27ம் தேதி இரவு அனுப்பப்பட்ட 18,973 லிட்டர் பால் கெட்டுப் போனதாக முகவர்கள் விற்பனை பிரிவு மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் 18,973 லிட்டர் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரத்தில் ஊழியர்கள் 11 பேரிடம் நஷ்ட ஈடு வசூலிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி ஆவின் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 25,000 லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து கடந்த 27ம் தேதி இரவு அனுப்பப்பட்ட 18,973 லிட்டர் பால் கெட்டுப் போனதாக முகவர்கள் விற்பனை பிரிவு மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பாலுக்கு மாற்று பால் வழங்கப்பட்டது. இதன் காரணமாக 8,34,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், பாலை கொதிகலனில் சூடேற்றும் போது ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த 10 ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களிடம் நஷ்ட ஈடு வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
-செய்தியாளர்: குமரேசன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.