கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த பிண்ணமங்கலம் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 74 மாணவர்கள் பயின்ற நிலையில், தற்போது 230 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் பள்ளியில் போதிய இடம் இல்லாததால் திறந்தவெளி பகுதியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர், பள்ளிக்கு அருகில் 10 சென்ட் நிலத்தை வாங்கி, அதில் சுமார் 34 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடமும் கட்டி அதனை மாணவர்கள் பயில அர்ப்பணித்தனர்.
சரஸ்வதி அம்மாளின் கணவரான ராமச்சந்திரா ரெட்டி, மாணவர்கள் படிப்பதற்கு உதவி புரிய வேண்டுமென்ற எண்ணத்தில் வாழ்ந்து மறைந்ததால், கணவரின் கனவை நிறைவேற்றுவதற்காக சரஸ்வதி அம்மாள் கல்வி சேவை புரிந்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக கட்டடம் வழங்கிய சரஸ்வதி அம்மாளின் குடும்பத்தினருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட தாய் பணம் தராததால் விரக்தி.. பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
பள்ளி மாணவர்களின் கல்விக்கு கட்டடம் வழங்கியதன் மூலம், பிண்ணமங்கலம் கிராமத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் முன்னோடியாக மாறியிருக்கிறார் சரஸ்வதி அம்மாள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.