Home /News /tamil-nadu /

சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு- ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் சராமாரியாக வெட்டி நபர் கைது- கிருஷ்ணகிரியில் பயங்கரம்

சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு- ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் சராமாரியாக வெட்டி நபர் கைது- கிருஷ்ணகிரியில் பயங்கரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் சரமாரியாக வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சோழாரஅள்ளியைச் சேர்ந்தவர் 40 வயதான பார்வதி; கணவனை இழந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி 45 வயதான முருகன்; மனைவியை இழந்தவர்.

    முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் முருகன் வீட்டில் இல்லாத நிலையில் வேறு சில ஆண்கள் வீட்டிற்கு வந்து செல்வதாக முருகனுக்குத் தகவல்கள் வந்தன.

    சில ஆண்களுடன் பார்வதி நட்பில் இருப்பதாகவும் தெரியவந்ததால் முருகன் ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் நடந்து வந்தன.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், அருகிலிருந்த கத்தியால் பார்வதியை முருகன் சரமாரியாக வெட்டினார்.

    முதுகு மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்த பார்வதி, அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்த முருகன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்வதியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மத்தூர் போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த முருகனைக் கைது செய்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime News, Krishnagiri

    அடுத்த செய்தி