கிருஷ்ணகிரியில் புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற மே 3- ம் தேதி இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்பட்டு மே 2 -ம் தேதி மாலை பிறை தெரிந்தவுடன் அடுத்த நாளான மே 3-ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும்.
இதனையடுத்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் இன்று வழக்கத்தை விட சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஒசூர் போன்ற இடங்களில் இருந்து வியாபாரத்திற்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.
அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை துவங்கியது. கர்நாடக மாநிலம் பெங்களூர், கோலார், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் பொதுமக்கள் என சுமார் 20 ஆயிரம் பேர் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ 12,000 விலை போகும், ஆனால் தற்போது ரம்ஜான் பண்டிகை விற்பனை என்பதால் சற்று அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ 15,000 முதல் ரூ 17,000 வரையில் விலை போனது.
Also read... போலி சாதிச்சான்று அளித்த அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு - நீதிமன்றம் உத்தரவு
இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக ஒரு ஆடு ரூபாய் 7,000 முதல் அதிகபட்சமாக 25,000 வரையில் விற்பனை ஆனது. இன்று ஒரு நாளில் மட்டும் குந்தாரப்பள்ளி வார சந்தையில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது.
வழக்கத்தை விட தற்போது ஆடு விலை சற்று அதிகரித்து உள்ளதாகவும். ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ 800க்கு விற்பனை செய்யும் நிலையில் ஆடு விலை அதிகம் காரணமாக கட்டுப்படி ஆகவில்லை என வெளியூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாரம் அதிகளவில் ஆடுகள் விற்பனை எடுத்து வந்துள்ளதாகவும் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை அடுத்து ஆடு விலை அதிகரித்து உள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக ஆடு வளர்ப்பு விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஆடு விற்பனை அதிகரித்து உள்ளது.
-செய்தியாளர்: குமரேசன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.