• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை குழாய் மூலம் கொண்டு வரமுடியுமா? கொண்டுவருவது ஏன் அவசியம்?

சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை குழாய் மூலம் கொண்டு வரமுடியுமா? கொண்டுவருவது ஏன் அவசியம்?

கிருஷ்ணா நதி

கிருஷ்ணா நதி

அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவை மிகப்பெரும் அளவில் இருக்கும் என்கிற நிலையில் குழாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவது முக்கியத்துவம் பெருகிறது.

  • Share this:
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திர அரசு தெலுங்கு-கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.  ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும்  சென்னை குடிநீருக்காக வழங்க வேண்டும் என்பது தமிழ்நாடு - ஆந்திர அரசுகளின் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்.

ஆனால் பொதுப்பணித் துறை வரலாற்றில் இதுவரை முழுமையாக 12 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைத்ததில்லை.
ஒருபுறம் சேதமடைந்த கால்வாய்கள். மறுபுறம் அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை, தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஜீரோ  பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை செல்லும் 25 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கால்வாய் வழியாக தான் இந்த கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு செல்லும். இதில் பல இடங்களில் கால்வாய் சேதமடைந்துள்ளது.இதனால் ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீரை முழுமையாக பூண்டி ஏரியில் சேமித்து வைக்க முடியவில்லை.

உ ரணமாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டால்  பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி மட்டுமே செல்லும். உடைந்த கால்வாய்களில் முழுமையாக சீரமைக்க முடியாததால் குறைவான தண்ணீரே வருகிறது.

Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர்மேலாண்மை வாரியத்தின் குழு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது, அந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக தமிழ்நாட்டிற்கு 12 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது இல்லை என்பதை ஆந்திர மாநிலம் உணர்ந்துள்ளது. இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு குழாய் மூலம் எடுத்து செல்ல இசைவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அதற்கான செலவை ஆந்திரா அரசு ஏற்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளது, தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கிருஷ்ணா நதியை பார்க்கிறது, சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் மற்றும் காவிரி ஆகிய வாய்ப்புகள் இருந்தாலும் கூட தற்போது சென்னை பெருநகர சென்னையாக விரிவடைந்து உள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Also Read:    கொடைக்கானல் செல்ல விருப்பமா? லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க..!

எனவே நாளுக்கு நாள் சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவை மிகப்பெரும் அளவில் இருக்கும் என்கிற நிலையில் குழாய் மூலம் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவதன் மூலமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் பெறவேண்டிய 12 டிஎம்சி தண்ணீர் முழுமையாக கிடைப்பதற்கும் தண்ணீர் வீணாகாமல் சென்னைக்கு வந்த அடைவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தற்போது கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக ஸ்ரீசைலம் அணை உள்ளது. ஸ்ரீசைலம் அணியைப் பொறுத்தவரையில் அதன் ஒரு பகுதி ஆந்திராவிலும் மற்றொரு பகுதி தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ளது,

கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம்  பிரமாண்ட திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீசைலம் அணையில் இருந்து இந்த திட்டத்தை கொண்டுவரும் பட்சத்தில் சுமார் 410 கிலோ மீட்டர் தூரம் குழாய் மூலம் தண்ணீரை எடுத்து வரும் திட்டம் சுமார் 15 ஆயிரம் கோடியை தாண்டும் திட்டமாக உள்ளது, அதேவேளையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டலேறு மற்றும் சோம சைலம் ஆகிய அணையிலிருந்து இத் திட்டத்தை நிறைவேற்றினால் சுமார் 5400 கோடி முதல் 7,300 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும்.

Also Read:  பிறந்த குழந்தையை கொலை செய்து சடலத்தை மருத்துவமனையின் கழிவறை ஜன்னலில் கட்டி வைத்த கொடூரம்!

தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒரு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதாரம் எப்படி திரட்ட இயலும் என்கிற சாத்தியக்கூறுகளை கண்டறியும் பணிகளை  நீர்வளத்துறை தொடங்கியுள்ளது.

இந்த  தெலுங்கு-கங்கை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 862 கோடி ரூபாய் வரை ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொருத்தவரையில் குழாய் மூலம் தண்ணீரை நீண்ட கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்து வரும் அனுபவம் உள்ளது, குறிப்பாக வீராணம் ஏரி தண்ணீரை சென்னைக்கு குழாய் மூலம் எடுத்து வரும் திட்டம் அதேபோல திருப்பூர் மாவட்டத்திற்கான குடிநீர் தேவைக்கான திட்டத்தையும் குழாய் மூலம் அடுத்து வரும் திட்டம் ஆகிய அனுபவங்கள் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறைக்கு உள்ளது. எனவே கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை தொலைநோக்கு பார்வையில் சிந்தித்து தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: