கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை! மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை! மாவட்ட ஆட்சியர் விளக்கம்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 9, 2019, 9:26 AM IST
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்னை தொடர்பாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.


பாதுகாப்பு காரணங்களுக்கு பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்