அதிமுக பொதுக்குழுவின் அனைத்து நடவடிக்கைகளும் சிறுபிள்ளை தனமாக அமைந்து இருநத்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு பெரும் பரபரப்புகளுக்கு இடையில் நடந்து முடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி நியூஸ் 18 தமழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வீரம், விவேகம் இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் நடந்து கொண்ட விதம் சிறு பிள்ளைதனமான நடவடிக்கைகளாக தான் பார்க்க முடியும்.
23 தீர்மானங்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டு அடுத்த பொதுக்குழு தேதியை அறிவித்து இருக்கின்றார்கள். குறைந்த பட்ச அறிவும், புத்திசாலித்தனமும் இருந்திருந்தால் 23 தீர்மானங்களையும் சேர்த்து அடுத்த பொதுக்குழுவில் விவாதித்து கொள்கின்றோம் என்று சொல்லி இருக்கலாம், சில தவிர்க்க முடியாத, நீதிமன்ற சட்டமன்ற நடைமுறைகள் காரணமாக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுகின்றது என சொல்லி இருக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்வடைகின்ற வகையில் பக்குவமாக, நிதானமாக உரிய தலைமை பண்புடன் சொல்லி இருக்கலாம்.
மனித வெடிகுண்டு போல கே.பி.முனுசாமியும், மாஃபா பாண்டியராஜனும் ஓ.பி.எஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர், அவர்கள் தங்கள் வேலையை கனச்கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஒட்டுமொத்த அதிமுக பொதுக்குழுவின் நடவடிக்கைகளும் சிறுபிள்ளை தனமாக அமைந்து விட்டது என விமர்சித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.