Home /News /tamil-nadu /

ஓ.பன்னீர் செல்வம் நீர்த்துப் போய்விட்டார்; அவரை ஏற்றுக்கொள்ள முடியாது- கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர் செல்வம் நீர்த்துப் போய்விட்டார்; அவரை ஏற்றுக்கொள்ள முடியாது- கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை ஓ.பன்னீர் செல்வம் நீர்த்துப் போய்விட்டார். அவரை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ‘ஒரு கட்சியின் தலைவர் பொதுக்குழுவிற்க்கு வந்து விவாதிக்க வேண்டும். ஆனால் மாறாக பொதுக்குழு நடைபெறக்கூடாது என்கிற நோக்கில் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார். அ.தி.மு.க தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர், சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும், அமைதி காக்கவேண்டும் என கடிதத்தில் தெரிவிப்பதும் நீதிமன்றத்திற்கு செல்வதும் கட்சி விதிகளுக்கு எதிரானது.

    ஓ.பன்னீர் செல்வம் எண்ணம் பொதுக்குழுவை நிறுத்தவேண்டும் என்பதே அப்படிபட்ட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என 70 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 63 சட்டமன்ற உறுப்பினர்கள், 70 மாவட்ட செயலாளர்கள், 5580 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    1999-ம் ஆண்டு பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒன்றியச் செயலாளர் அன்பழகன் ஒரு நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னம் முன்பாக நின்றதால் அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி கடுமையாக எச்சரித்தார். அந்த தலைமை கீழ் இயக்கும் அதிமுக பல்வேறு பொறுப்புகளில் இருந்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஆளூனர் மாளிகையில் திமுக முதலமைச்சருடன் தேனீர் அருந்துவதும் சட்ட பேரவையின் பராசக்தி படம் கதை வைத்திருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் மகன் முதலமைச்சரை சந்தித்து ஆட்சி சிறப்பாக இருக்கிறது என சொல்லுவதை திமுக அமைச்சர் பொது மேடையில் பேசுகிறார்.

    அதிமுகவை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு சென்றீர்கள்.. ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் பலகட்சிகள் நாங்கள் தான் என பேசலாம். அது நடக்காது. திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். நாங்கள் பங்காளிகள். ஆனால் பகை எப்போதும் இருக்கும். இந்த பகைக்கு தீர்த்து போகும் வகையில் செயல்பட்டால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    அதிமுக-வை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் நீர்த்து போகி விட்டார். அவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓ.பன்னீர்செல்வம் மீது அதிருப்தி இருந்ததால் தான் அதிமுகவினர் அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என ஒரு நிலைபாடுடன் இருக்கின்றனர். ஒற்றை தலைமையாக இருக்கும் திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கும் ஒற்றை தலைமை என்பது அவசியமாகிறது. எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் இரட்டை தலைமையால் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற தர்ம சங்கடங்கள் இருக்கிறது. திமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய ஓ.பன்னீர் செல்வம் மௌனம் சாதிப்பதால் இந்த இயக்கத்தின் நலன் கருதி ஒற்றை தலைமையை முன் நிறுத்துகிறோம்’ என்று தெரிவித்தார்
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, O Panneerselvam

    அடுத்த செய்தி