Home /News /tamil-nadu /

ஓ.பி.எஸ்ஸின் ஒப்புதலுடன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் - கே.பி.முனுசாமி

ஓ.பி.எஸ்ஸின் ஒப்புதலுடன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் - கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவினர்

கே.பி.முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவினர்

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 23ஆம் தேதி மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் மாறி, மாறி பேட்டி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ’திட்டமிட்டபடி 23-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் இந்த கூட்டம் நடைபெறாது. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த கமிட்டி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார்கள்.

    அமைதியான சூழல் இல்லை: பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடிக்கு கடிதம்

    தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானங்களை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் பல தொண்டர்கள் என நாங்கள் அனைவரும் ஏற்று கொள்வோம். பொதுக்குழு குறித்த தகவல் வெளியானபோது 2,000 பொதுக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்ட தேதியில் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கடிதம் எழுதினார்கள்’ என தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி