ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் ஆ.ராசாவும் மு.க.ஸ்டாலினும் தயாரா?- கே.பி.முனுசாமி கேள்வி

திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் ஆ.ராசாவும் மு.க.ஸ்டாலினும் தயாரா?- கே.பி.முனுசாமி கேள்வி

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

அதிமுக அரசின் திட்டம் மற்றும் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் ஆனால், ஆர்.ராசா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தயாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுக அரசின் திட்டம் மற்றும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் ஆனால், ஆர்.ராசா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தயாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

  அப்போது, ரஜினி கட்சி தொடங்க இருப்பது பற்றியும், கூட்டணி குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “நடிகர் ரஜினிகாந்த் முதலில் அறிவித்த தேதியில் கட்சியைத் தொடங்கட்டும், அவரது கொள்கைகள் திராவிட இயக்கத்துடத்துடன் ஒத்துப் போகிறாதா என பார்ப்போம். பிறகுதான் நாங்கள் எங்களின் கருத்துக்களைத் தெரிவிப்போம் என்று கூறினார்.

  திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சமீபத்தில் கூறியுள்ள கருத்தைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,  “ஆ.ராசா தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. அரசியல் நாகரிகத்துடன் பேசத் தெரியாத ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்.” என்றும், இத்தகைய கருத்துக்களுக்கு, எங்களைப் போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என கருதுவதாகவும் கூறினார்.

  மேலும்,  “அதேநேரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ராஜா என்று கூறிய கே.பி.முனுசாமி, அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் அவருடன் விவாதிப்பது எங்கள் வேலை அல்ல, ஆனாலும், ராசாவுக்கு நான் சவால் விடுகிறேன், தமிழகத்தில் அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலப்பணி திட்டங்கள் மற்றும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் ராசா தயாரா? ஸ்டாலின் தயாரா? ராசாவுடைய வழக்கைப் பற்றி விசாரிக்க விவாதம் தேவை இல்லை. இந்த வழக்கில் ராசா சிறையில் இருந்தவர். தற்போது அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்று கே.பி முனுசாமி கூறினார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: ADMK