முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.1 கோடி கேட்டார் கே.பி.முனுசாமி..? ஆடியோ வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

ரூ.1 கோடி கேட்டார் கே.பி.முனுசாமி..? ஆடியோ வெளியிட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

கே.பி முனுசாமி - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

கே.பி முனுசாமி - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

அதிமுகவில் சீட்டு - ரூ.1 கோடி பேரம் பேசியதாக கே.பி.முனுசாமி ஆடியோவை வெளியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2021 சட்டமன்ற தேர்தல் எனக்கு கொளத்தூர் தொகுதிக்கு சீட் கேட்டு அதை வாங்கி தருகிறேன் என்று கே.பி.முனுசாமி பணம் கேட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த  சட்டமன்ற  தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தன்னை வேட்பாளராக இறுதி செய்ய கே.பி.முனுசாமி  ரூ.1 கோடி ரூபாய் தன்னிடம் கேட்டு பேரம் பேசியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான ஆடியோ ஒன்றையும்  வெளியிட்டார். இந்த ஆடியோவில், தான் தற்போது 50 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து விட்டதாக கூறுவதும், அதை கே.பி. முனுசாமி தன் மகனிடம் கொடுக்க சொல்வதை போலவும் உள்ளது.

இந்த ஆடியோ குறித்து கே.பி முனுசாமியிடம் கேட்ட போது, 'திட்டமிட்டு தன்னை அவமதிக்கும் வகையில் இந்த ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்யின் தூண்டுதலின் பேரில் கிருஷ்ணமூர்த்தி இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் உண்மை என்னவென்று கிருஷ்ணமூர்த்திக்கே தெரியும் எனவும்’ நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கே.பி.முனுசாமி விளக்கமளித்துள்ளார்.

First published:

Tags: ADMK, TN Assembly Election 2021