பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு..

அக்டோபர் முதல் வாரத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு..
அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • News18
  • Last Updated: September 17, 2020, 9:47 AM IST
  • Share this:
செப்டம்பர் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 25-ம் தேதி வெளியாகும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்விற்கான ஆன்லைன் பதிவு கடந்த ஜூலை 15-ஆம் தேதி துவங்கியது இதனையடுத்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் கலந்தாய்விற்கு ஆக பதிவு செய்தனர்.

இதனையடுத்து சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.


Also read... திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு - திமுக எதிர்ப்பு..இதனையடுத்து 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கோரியதை அடுத்து தற்போது தரவரிசை பட்டியல் வருகின்ற 25-ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading