கோயம்பேடு மெட்ரோ - பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோயம்பேடு மெட்ரோ - பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பாஷ்யம் என்பது தமிழ் நாட்டில் உள்ள தலைவரின் பெயரா? எதற்காக அவரது பெயர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்கள்.

  • Share this:
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாஷ்யம் மெட்ரோ என்று எழுதப்பட்டிருந்த பெயர் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பரதாரர்களுக்கு அவர்கள் நிறுவனத்துக்காக விளம்பரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் பெயரை சூட்டி இருந்தார். ஆனால் பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனம் கோயம்பேடு ரயில் நிலையத்திற்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று பெயரிட்டு இருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் பாஷ்யம் என்பது தமிழ் நாட்டில் உள்ள தலைவரின் பெயரா? எதற்காக அவரது பெயர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்ற பெயர் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

Also read: ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - எதிர்க்கட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என்று எழுதப்பட்டதால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Published by:Esakki Raja
First published: