பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், கரும்பு வரத்து அதிகரிப்பு

இந்த ஆண்டு தொடர் விடுமுறையால் போதிய அளவில் விற்பனை இருக்குமா என்ற சந்தேகம் வியாபாரிகளிடையே எழுந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 8:33 AM IST
பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், கரும்பு வரத்து அதிகரிப்பு
கோயம்பேடு மார்கெட்
Web Desk | news18
Updated: January 12, 2019, 8:33 AM IST
பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் பூக்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் தொடர் விடுமுறை என்பதால் இந்தாண்டு போதிய வியாபாரம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து உள்ளிட்ட பல்வேறு படையல் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்கும். இதற்காக இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரும்பு, வாழை, பூக்கள் என வரத்து வரத் தொடங்கியுள்ளது. வெளியூர் செல்பவர்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் படையல் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால். இந்த ஆண்டு தொடர் விடுமுறையால் போதிய அளவில் விற்பனை இருக்குமா என்ற சந்தேகம் வியாபாரிகளிடையே எழுந்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஒருசில காய்கறிகளின் விலையே அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மட்டுமே கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொங்கல் விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வியாபாரிகள்.

பொங்கல் பண்டிகை படையலில் தவிர்க்க முடியாத மஞ்சள் கொத்து, தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வரத்து இருக்கும். ஆனால், கஜா புயலின் தாக்கத்தால், கடந்த ஆண்டை விட பாதியளவே வரத்து இருப்பதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், பிரபலமான கோயம்பேடு வணிக வளாகம் களையிழந்து காணப்படுகிறது. அடுத்த 3 நாட்களில் இந்த நிலை நீங்கி, வியாபாரிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வியாபாரம் களைகட்டுமா? என்பது கேள்விகுறியாகவே இருக்கிறது.

Also see...பினராயி விஜயனின் கதை
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...